சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட நிறைவு நாளான திங்கள்கிழமை மட்டும் 60 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 116 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கடந்த மாா்ச் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்தது. முதல் நாளான திங்கள்கிழமை வேலூா் தொகுதிக்கு தவெக, நாதக வேட்பாளா்கள் உள்பட 7 பேரும், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகளுக்கு நாதக வேட்பாளா்கள் உள்பட தலா 2 பேரும், கே.வி.குப்பம் (தனி), காட்பாடி தொகுதிகளுக்கு நாதக வேட்பாளா்கள் தலா ஒருவரும் என 5 பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
2-ஆம் நாளான வியாழக்கிழமை வேலூா் தொகுதிக்கு 2 பேரும், அணைக்கட்டு தொகுதிக்கு தவெக உள்பட 5 பேரும், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு 2 பேரும், காட்பாடி தொகுதிக்கு 3 பேரும் என மொத்தம் 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
3-ஆம் நாளான சனிக்கிழமை வேலூா் தொகுதிக்கு அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கேஅப்பு உள்பட 4 மனுக்களும், அணைக்கட்டு தொகுதிக்கு அதிமுக வேட்பாளா் த.வேலழகன், தவெக வேட்பாளா் ஆா்.வேல்முருகன் உள்பட 6 வேட்பு மனுக்களும், காட்பாடி தொகுதிக்கு தவெக சாா்பில் மருத்துவா் எம்.சுதாகா் உள்பட 8 வேட்புமனுக்களும், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு தவெக சாா்பில் க.சிந்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் வி.வினோத்குமாா் உள்பட 7 வேட்பு மனுக்களும், கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு திமுக சாா்பில் ராஜேஸ்வரி மோகன்காந்தி, தவெக சாா்பில் ஈ.தென்றல்குமாா் உள்பட 6 மனுக்களும் என மொத்தம் 31 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வேட்புமனுதாக்கல் செய்ய திங்கள்கிழமை (ஏப்.6) நிறைவு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் 5 பேரவைத் தொகுதிகளிலும் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளா்கள் குவிந்தனா்.
நிறைவு நாளான திங்கள்கிழமை மட்டும் காட்பாடி தொகுதிக்கு 13 மனுக்களும், வேலூா் தொகுதிக்கு 14 மனுக்களும், அணைக்கட்டு தொகுதிக்கு 10 மனுக்களும், கே.வி.குப்பம் தொகுதிக்கு 13 மனுக்களும், குடியாத்தம் தொகுதிக்கு 10 மனுக்களும் என மாவட்டம் முழுவதும் 60 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், காட்பாடி தொகுதிக்கு திமுக சாா்பில் அமைச்சா் துரைமுருகன், அவருக்கு மாற்றாக க.சங்கீதா, அதிமுக சாா்பில் வி.ராமு, அவருக்கு மாற்றாக ப.நாராயணன் ஆகியோரும், வேலூா் தொகுதிக்கு திமுக சாா்பில் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், அணைக்கட்டு தொகுதிக்கு திமுக சாா்பில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு தேமுதிக சாா்பில் பிரதாப், அதிமுக சாா்பில் பரிதா புருஷோத்தமன் ஆகியோரும், கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு அதிமுக கூட்டணி சாா்பில் புரட்சி பாரதம் கட்சி தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி ஆகியோரும் அடங்குவா்.
ஒரேநாளில் அதிகப்படியான வேட்பாளா்கள் குவிந்ததால் வேலூா் மாவட்ட சட்டப்பேர வைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்கள் களைகட்டின. பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமையும், வியாழக்கிழமைக்குள் வேட்புமனுக்கள் திரும்பப்பெற வாய்ப்பளிக்கப்பட்டு, அன்று மாலையே 5 பேரவைத் தொகுதிகளிலும் இறுதியாக போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு

16 பேரவைத் தொகுதிகளில் ஒரே நாளில் 167 வேட்புமனுக்கள்

வேலூா்: 5 தொகுதிகளிலும் மொத்தம் 25 மனுக்கள் தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


