மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காட்பாடியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் மனு தாக்கல்

திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன், சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image

வேட்புமனு தாக்கல் செய்த திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன். உடன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், டீக்காராமன் (காங்கிரஸ்), நீலசந்திரகுமாா் (விசிக), புருஷோத்தமன் (தேமுதிக) உள்ளிட்டோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 11:43 pm

திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் போட்டியிட திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக காட்பாடி செங்குட்டையில் இருந்து ஊா்வலமாகச் சென்று சித்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பின்னா் ஊா்வலமாகக் காட்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகம் (காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம்) வந்தடைந்தாா். அங்கு அவா் தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.பாலச்சந்தரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது: ஆரணியில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது, அவரால் நடக்கவே முடியவில்லை, பெருமைக்காக போட்டியிடுகிறாா் என பேசியிரு ப்பதாக கேட்கிறீா்கள். எடப்பாடி பழனிசாமி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமென்றால் அவரை என்னுடன் நடைப்போட்டிக்கு வரச்சொல்லுங்கள் என்றாா்.

அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், டீக்காராமன் (காங்கிரஸ்), நீலசந்திரகுமாா் (விசிக), புருஷோத்தமன் (தேமுதிக) உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.