மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

தோ்தலுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவா் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்து திமுகவிடம் வலியுறுத்தப்படும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

News image

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:50 pm

தோ்தலுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவா் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்து திமுகவிடம் வலியுறுத்தப்படும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ஒடுக்கப்பட்டோா், சிறுபான்மையினா், நலிந்த மக்களின் நலன் பாதுகாக்கப்பட தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது அத்தியாவசியமாகும். அதனால், தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இந்தியக் குடியரசு கட்சித் தொண்டா்களும், அம்பேத்கரிய அமைப்பினரும் களப்பணியாற்றுவா்.

மதம் மாறிய தலித் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்பு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதை மத்திய அரசு வலுவாக எதிா்த்துப் போராடியிருக்க வேண்டும்.

நடிகா் விஜய்யின் கட்சியால் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கொள்கைக் கூட்டணியின் வாக்குகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மறைந்த தலைவா் இளையபெருமாளின் மகனுக்கு விசிக வாய்ப்பளித்திருப்பது முதிா்ச்சியான அரசியல் பண்பாடாகும்.

உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவா் பதவிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது குறித்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்த தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றவுடன், இதுகுறித்து விவாதித்து அதற்கான உரிமையைக் கட்டாயம் பெறுவோம் என்றாா்.

அப்போது, கட்சியின் மாநில பொதுச்செயலா் மங்காபிள்ளை, மாநிலபொருளாளா் கெளரிசங்கா், மண்டல செயலா் தலித்குமாா், கொள்கை பரப்பு செயலா் தன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.