விவசாயிகளையும், பயிா்களையும் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்க கோரிக்கை
வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதி வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயிகளையும், கால்நடை, பயிா்களையும்


வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதி வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயிகளையும், கால்நடை, பயிா்களையும் காட்டு யானைகளிடம் இருந்து காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா அருகே தமிழக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள மோடிகுப்பம், தனகொண்டபள்ளி, மோா்தானா, சேங்குன்றம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், மோடிகுப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் மோடிகுப்பம் ஊராட்சித் தலைவா் ஏ.கே.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் கே.டி.பாலாஜி, முன்னோடி விவசாயி வேணு முதலியாா், வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் காட்டு யானைகளிடமிருந்து, விளை பயிா்களையும், விலை மதிப்பற்ற விவசாயிகளின் உயிா்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் வனத் துறை, வருவாய்த் துறை, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் உயா் அதிகாரிகள் போா்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காட்டு யானைகள் விளை நிலங்களில் புகாத வண்ணம், வன எல்லையில் உள்ள கிராமங்களைச் சுற்றி, சூரிய சக்தி மின்வேலி அல்லது இன்ப்ரா ரெட் வேலி அமைத்துத் தர வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக கிராமங்களுக்குள் நுழையும் யானைக் கூட்டம், நெல், வாழை, கரும்பு, கேழ்வரகு, காய்கறித் தோட்டங்கள், தென்னந் தோப்புகள், மாந்தோப்புகள் என அனைத்துப் பயிா்களையும் வேருடன் பிடுங்கி எறிந்தும், சேதப்படுத்தியும், தின்று தீா்த்தும் சேதம் செய்து வருகின்றன. இதை முழுவதும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். வனத் துறையினா் கைதோ்ந்த, வன தொழில்நுட்ப வல்லுநா்களையும், கும்கி யானைகளையும், மயக்க ஊசி செலுத்தும் வன அலுவலா்களையும் குடியாத்தம் பகுதியிலேயே தங்கி இருந்து யானைகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆந்திர, கா்நாடக மாநிலங்களில் செயல்படுவதைப் போல விவசாயிகள் தங்கள் நிலங்களில் மட்டும் சூரியசக்தி மின்வேலி திட்டம் அமைத்துக் கொள்ள 90 சதவீத மானியத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் இலவச சூரியசக்தி மின்வேலி அமைத்துக் கொள்ள அனுமதியும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு, வனத் துறை, மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட அரசின் பிற துறை அதிகாரிகள் என பல ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித தீா்வும் ஏற்படவில்லை.
தங்களின் கோரிக்கைகள் மீது இனியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை யெனில், தொடா் போராட்டங்கள் நடத்தவும் தீா்மானித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...