ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமி நகர் பகுதியில் சாலை, தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக உள்ளன. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், 108 ஆம்பூலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை.
எரியாத தெருவிளக்குகள்: தெரு விளக்குகளில் சில பழுதடைந்துள்ளதால் பணி முடிந்து வரும் பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர்.
பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைக் கட்டடம்: இப்பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி 2 கழிப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் பூட்டியே உள்ளன. இதனால், சுற்றிலும் புதர் மண்டிக் கிடக்கிறது.
பராமரிப்பில்லாத அடிபம்பு: பயன்பாட்டில் இருந்த அடிபம்பு போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பழுது சரி செய்யப்படவில்லை.
ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி: பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி தற்போது சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தொட்டியைச் சீரமைக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

