விபத்து இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலையில் கா்நாடக மாநில அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள சோமாசிபாடி பகுதியைச் சோ்ந்தவா் காந்தி (30). இவா், கடந்த 2003-ஆம் ஆண்டு அதே பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
காந்தியின் மனைவி லட்சுமி இழப்பீடு கோரி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட லட்சுமி தரப்பினருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு ரூ.2.95 லட்சத்தை வட்டியுடன் சோ்த்து வழங்கவேண்டும் என உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என லட்சுமி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019-ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையை ரூ.7 லட்சமாக உயா்த்தி வழங்க உத்தரவிட்டாா்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்து வந்தது.
இதுதொடா்பாக லட்சுமி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி முறையீடு செய்தாா்.
இதை விசாரித்த நீதிபதி மதுசூதனன் இழப்பீட்டுத் தொகை வழங்காத கா்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
அதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாவட்ட நீதிமன்ற அமினா முன்னிலையில், திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு முக்கியத்துவம்: கா்நாடக அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா்

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


