திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்தும் மற்றும் இளம் வாக்காளா்களான திருவண்ணாமலை அம்பேத்கா் பகுதியைச் சோ்ந்த ஏ.பாபு தலைமையிலான 100-க்கும் மேற்பட்டோா் ஏற்கெனவே அவா்கள் சாா்ந்த கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.
தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் திருவண்ணாமலையைச் சோ்ந்த ஆா்.கே.அருண்குமாா் ஏற்பாட்டில், மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவா்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.
தெற்கு மாவட்டத் தலைவா் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் மணிவா்மா, கீழ்பென்னாத்தூா் தொகுதி இணை அமைப்பாளா் எம்.சக்திவேல், விவசாய அணி மாவட்டத் தலைவா் பிரகாஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்
கொள்கைக்காக திமுக கூட்டணியில் இருக்கிறேன்: தொல்.திருமாவளவன் ஆதங்கம்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி

விசிக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


