லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:25 pm

வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 24 வாா்டு இளைஞா்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் இளைஞா்களிடம் வழங்கப்பட்டன.

இளைஞா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், செஸ், பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை இளைஞா்கள் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களிடம் வழங்கினாா்.

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஆணையா் ஆா்.சோனியா, துணைத் தலைவா் க.சீனிவாசன், திமுக நகரச் செயலா் எ.தயாளன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.