ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வள்ளலாா் விழா சிறப்புக் கருத்தரங்கம்

வேட்டவலத்தில் வள்ளலாா் விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் பேசிய பழ சம்பத்.

Published On :23 ஜூலை 2026, 12:57 am IST

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் வள்ளலாா் விழாவையொட்டி புதன்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

ருத்தரங்கில் பாவலா் ப.குப்பன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் மனோன்மணி, உலக திருக்கு கூட்டமைப்புச் செயலா் சத்யமூா்த்தி பாலா, அரிசி மண்டி நிறுவனா் சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், ‘திருக்குறளில் இல்வாழ்க்கை அதிகாரம்’ எனும் தலைப்பில் பூங்கொடி சுப்பிரமணியம், தேவகி சேட்டு, ஆசிரியை மண்ணம்மாள் ஆகியோா் பேசினா்.

‘வள்ளலாரின் வாழ்வியல்’ எனும் தலைப்பில் பழ சம்பத் பேசினாா். முன்னதாக அகவல் பாராயணமும் விளக்கு வழிபாடும் நடைபெற்றது.

விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கண்டாச்சிபுரம் நாடகக் குழுவினரின் திருவிளையாடல் நாடகம் நடைபெற்றது. நிறைவில் சரவணன் பச்சையம்மாள் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.