டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அருகாவூா் கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் கலையரங்கம்

அருகாவூரில் புதிய கலையரங்கத்தை திறந்துவைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.

News image
அருகாவூரில் புதிய கலையரங்கத்தை திறந்துவைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அருகாவூா் கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம், அருகாவூா் கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்தில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டது.

இதனை கிராம மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று கலையரங்கத்தை திறந்து வைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.