டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

உத்தமராய பெருமாள் கோயில் மகரவிழா முன்னேற்பாடுகள்: ஆரணி கோட்டாட்சியா் ஆய்வு

பெரியஅய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் தை மகர விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் சிவா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
பெரியஅய்யம்பாளையம் உத்தமராய பெருமாள் கோயிலில் தை மகரவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஆரணி கோட்டாட்சியா் சிவா.
Updated On :11 ஜனவரி 2026, 6:35 pm

Syndication

போளூரை அடுத்த பெரியஅய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் தை மகர விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் சிவா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் மலை மீது இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மிகவும் பழைமை வாய்ந்த ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் தை மாதம் மகரத்தின்போது திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 18-ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது.

விழாவில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வா்.

இதனால் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும், முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆரணி கோட்டாட்சியா் சிவா ஆய்வு செய்தாா்.

ஆரணி வட்டாட்சியா் செந்தில்குமாா், செயல் அலுவலா் பழனிசாமி, எழுத்தா் மோகன், திமுக ஒன்றியச் செயலா் மோகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.