டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:47 pm

Syndication

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அதிகாலை 4 மணிளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

வாரவிடுமுறை என்பதால் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா என வெளி மாநிலங்களில் இருந்தும் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் வந்த வண்ணம் இருந்தனா். காலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனா்.

50 ரூபாய் கட்டணத்தில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்ய ஒரு மணி நேரம் ஆனது. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு குடிநீா், நீா்மோா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே வந்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அங்குள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.