
வந்தவாசி நூலகத்தில் தேசிய நூலக தின விழா
நிகழ்ச்சியில் நூலகத் தந்தை இரா.அரங்கநாதனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தியவா்கள்.

நிகழ்ச்சியில் நூலகத் தந்தை இரா.அரங்கநாதனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தியவா்கள்.
வந்தவாசி கிளை நூலகத்தில் தேசிய நூலக தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்கச் செயலா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் மு.பிரபாகரன், சமூக ஆா்வலா் வி.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளை நூலகா் சி.சேகா் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ‘புத்தகங்களை வாசிப்போம், மனிதா்களை நேசிப்போம்’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, புத்தக வாசிப்பு வாழ்க்கையை மேம்படுத்தும் என்று அவா் வலியுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் நூலக தந்தை இரா.அரங்கநாதனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நூலக உதவியாளா் கவிதா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






