ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உத்தமபாளையத்தில் பெருந்தலைவா் காமராசா் பிறந்த நாள் விழா

உத்தமபாளையத்தில் புதன்கிழமை காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவா்கள்.

Published On :16 ஜூலை 2026, 1:45 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் புதன்கிழமை காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

உத்தமபாளையம் கல்லூரிச் சாலையிலுள்ள நாடாா் பேட்டையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடாா் உறவின் முறை சங்கத்தின் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பொன்ராஜா முன்னிலை வகித்தாா். இதில் காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதே போல, தவெக சாா்பில் மாரியம்மன்கோவில் தெருவில் காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, இனிப்புகள், பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.