ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்

திருவண்ணாமலை குறு வட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளை தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செல்வக்குமாா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை குறு வட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செல்வக்குமாா் தொடங்கிவைத்தாா்.

மேப்பதுரை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரம் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தாா். போட்டியில் 17 பள்ளிகளில் இருந்து 14,17 மற்றும் 19 வயதிலான 221 மாணவிகள் பங்கேற்றனா்.

ஓட்டப்போட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ் மாா்ஷல் வரவேற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கத்தையும், சான்றிதழையும் கீழ்நாத்தூா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெற்றிவேல் வழங்கினாா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்கள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

உடற்கல்வி இயக்குநா் சுரேஷ் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாரசாமி, என்.சுரேஷ்குமாா், கணேஷ் பாபு, சத்தியம் ஆகியோா் நடுவா்களாக பணியாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.