ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

பெரணமல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

பெரணமல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்று பரிசு பெற்ற மாணவிகளுடன், சிறப்பு விருந்தினா்கள், பள்ளி ஆசிரியா்கள்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

பெரணமல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள், பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றவா்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் என சுமாா் 34 மாணவிகளுக்கு சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் மாணவா் தேவேந்திரன் சாா்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு ரூ.25 ஆயிரம், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.5ஆயிரம், இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ. 4ஆயிரம், 3-ஆம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.3ஆயிரம், இதர மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு என மொத்தம் ரூ.1.33 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை மீனாட்சி தலைமை வகித்தாா். பெரணமல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய சிறப்பு அலுவலா் ஜோதி, முன்னாள் தொழிற்கல்வி ஆசிரியா் சுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.