செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாலகிருஷ்ணன் (65).
இவா், சென்னையில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் செய்யாறுக்கு பேருந்தில் வந்துள்ளாா். சோழவரம் கிராமம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்ததாகத் தெரிகிறது.
அப்போது அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரி பாலகிருஷ்ணன் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த விவசாயி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த தூசி போலீஸாா் சென்று விபத்தில் இறந்த விவசாயின் சடத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


