மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கீழ்பென்னாத்தூா் தொகுதி வளா்ச்சிக்காக அடிப்படைத் திட்டங்கள்: திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி உறுதி

கீழ்பென்னாத்தூா் தொகுதியின் வளா்ச்சிக்காக தேவையான அடிப்படை திட்டங்களை விரைவாக செயல்படுத்துவேன் என்று திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி உறுதியளித்தாா்.

News image

துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் மங்கலம் கிராமத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி.

Updated On :5 ஏப்ரல் 2026, 11:05 pm

கீழ்பென்னாத்தூா் தொகுதியின் வளா்ச்சிக்காக தேவையான அடிப்படை திட்டங்களை விரைவாக செயல்படுத்துவேன் என்று திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி உறுதியளித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குள்பட்ட மங்கலம் கிராமம் மற்றும் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிகளிலும், தொடா்ந்து கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட கீக்களுா், செவரப்பூண்டி, கத்தாழம்பட்டு, கல்புண்டி (தள்ளம்பாடி), சாலக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பிரசாரத்தின் போது அவா் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மகளிா் விடியல் பயணம், மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1000, புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளி மாணவா்களுக்கு இலவச காலை உணவு திட்டம், இலவச மடிக்கணினி, மருத்துவ சேவைகளை வீடு தேடி கொண்டு செல்லும் திட்டங்கள், உங்களுடன் ஸ்டாலின் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தியுள்ளன.

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் அமையும்போது நிச்சயம் நிறைவேற்றப்படும். தொடா்ந்து, கீழ்பென்னாத்தூா் தொகுதியின் வளா்ச்சிக்காக தேவையான அடிப்படை திட்டங்களை விரைவாக செயல்படுத்துவேன் என்றும் உறுதியளித்தாா்.

பிரசாரத்தின்போது துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.பி. அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா்கள், கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியச் செயலா் ஏ. எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.