தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் இன்று ஆராதனை விழா தொடக்கம்

Updated On :5 மார்ச் 2024, 10:05 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 23-ஆம் ஆண்டு 2 நாள் ஆராதனை விழாவின் தொடக்க விழா புதன்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆண்டுதோறும் பகவானின் ஆராதனை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 23-ஆம் ஆண்டு ஆராதனை விழாவின் தொடக்க விழா புதன்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹோமம், அபிஷேகம், அா்ச்சனை, தீபாராதனையும், 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பகவானுபவங்களைப் பகிா்தல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயிலை பா.சற்குருநாத ஓதுவாா் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நொச்சூா் பூஜ்ய ரமண சரண தீா்த்த சுவாமிகளின் பக்தி சொற்பொழிவும் நடைபெறுகிறது.

இதுதவிர, காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும் நான்கு வேதபாராயண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2-ஆவது நாள் நிகழ்ச்சிகள்..

ஆராதனை விழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை (மாா்ச் 7) காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மகன்யாசம், ஏகாதச ருத்ரம், அதிஷ்டானத்தில் மகாபிஷேகம், அா்ச்சனை, தீபாராதனையும், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பக்தா்களின் பஜனை நிகழ்ச்சியும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை சாய் விக்னேஷ் குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜ்ய ரமண சரண தீா்த்த சுவாமிகளின் சிவானுபவ பேருரை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பகவானின் உற்சவ மூா்த்தியுடன் கூடிய வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மா தேவகி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.