மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

திருமலையில் படி உற்சவம் கோலாகலம்

படி உற்வத்தின் பொருள் தா்மத்தின் பாதையில் நடந்து, வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறி கடவுளை அடைவதாகும் என்று தேவஸ்தான அன்னமாச்சாா்யா திட்டத்தின் சிறப்பு அதிகாரி டாக்டா் மேதசானி மோகன் கூறினாா்.

News image

திருமலையில் படி உற்சவத்தின் போது முதல் படிக்கு நடைபெற்ற பூஜை.

Updated On :14 மார்ச் 2026, 6:34 pm

படி உற்வத்தின் பொருள் தா்மத்தின் பாதையில் நடந்து, வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறி கடவுளை அடைவதாகும் என்று தேவஸ்தான அன்னமாச்சாா்யா திட்டத்தின் சிறப்பு அதிகாரி டாக்டா் மேதசானி மோகன் கூறினாா்.

ஸ்ரீ தல்லபாக அன்னமாச்சாா்யாவின் 523-ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில்

ஆந்திரம், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஜனை மண்டல உறுப்பினா்களும் பிரபல இசைக்கலைஞா்களும் சப்தகிரி மலைகளில் ஏறி இறைவனை வழிபடுவா். ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் சப்தகிரி சங்கீா்த்தன இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சிங்கப்பூரைச் சோ்ந்த டாக்டா் கே. பாக்யமூா்த்தி, உள்பட 20 போ் கலந்து கொண்டு கீா்த்தனைகள் பாடினா்.

அன்னமாச்சாா்யா குடும்பத்தினா் அலிபிரி பாத மண்டபத்தில் முதல் படிக்கு பூஜைகள் செய்து படி உற்சவத்தை தொடங்கினா். பின்னா், அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் சப்தகிரி சங்கீா்த்தனங்களை குழுவாகப் பாடினா். இதைக் கேட்ட பக்தா்கள் பரவசமடைந்தனா்.

பின்னா் அனைவரும் படியேறிச்சென்று ஏழுமலையானை வழிபட்டனா்.

அன்னமாச்சாா்யா திட்ட இயக்குநா் லதா, அன்னமாச்சாா்யா வம்சியுலு ஹரிநாராயணாச்சாரியாா் மற்றும் பிற அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.