பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.49 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

திருப்பதி - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 3:15 am IST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 86, 021 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33, 356 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.49 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.08 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2,703 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.