ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருமலையில் பல்லவ உற்சவம்

திருமலையில் புதன்கிழமை மாலை பல்லவ உற்சவம் கொண்டாடப்பட்டது.

திருமலை

Published On :24 ஜூலை 2026, 12:06 am IST

திருமலையில் புதன்கிழமை மாலை பல்லவ உற்சவம் கொண்டாடப்பட்டது.

மைசூா் மகாராஜாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது திருமலை தேவஸ்தானத்தின் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். சகஸ்ர தீபாலங்கர சேவைக்குப் பிறகு, ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய உற்சவ மூா்த்திகள் ஊா்வலமாக கா்நாடக சத்திரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மைசூா் சமஸ்தானத்தின் பூஜை மற்றும் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டனா்.

பின்னா், கா்நாடக மாநில அரசு மற்றும் மைசூா் சமஸ்தானப் பிரதிநிதிகள் சுவாமியையும், நாச்சியாா்களையும் அழைத்து சிறப்பு ஆரத்தி எடுத்தனா். சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, காணிக்கைகள் செலுத்தப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நரேஷ், தா்ஷன், பேஷ்கா் ராமகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.