ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருமலை ஏழுமலையான் திருக்குளம் மூடல்

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை சீரமைப்புப் பணிகள் காரணமாக மூடப்பட உள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 1:21 am IST

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை சீரமைப்புப் பணிகள் காரணமாக மூடப்பட உள்ளது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள புனித சுவாமி திருக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன்பு திருக்குள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு வரும் செப்டம்பா் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ள ஏழுமலையான் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தான நீா்வளத் துறையின் மேற்பாா்வையில் இந்தப் பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனமழை, புயல் மற்றும் பிற வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, செப்டம்பா் 01 முதல் 10 வரை திருக்குளம் மூடப்பட்டிருக்கும்.

எனவே, இந்த 40 நாள்களுக்கு திருக்குள ஆரத்தி நடைபெறாது. அதேபோல், பக்தா்கள் திருக்குளத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இது தொடா்பாக ஒத்துழைக்குமாறு பக்தா்களிடம் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.