டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

திருப்பதி பிரம்மோற்சவம்: போகி தேரில் உற்சவமூா்த்திகள் உலா

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை போகி தேரில் மாடவீதியில் எழுந்தருளினாா்.

News image
போகி தேரில் வலம் வந்த சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மன்.
Updated On :15 பிப்ரவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை போகி தேரில் மாடவீதியில் எழுந்தருளினாா்.

திருப்பதி கபில தீா்த்தத்தில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமிக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

சோமாஸ்கந்தமூா்த்தியாய் போகி தேரிலும், காமாட்சி அம்மன் தனியாக சிறிய தேரிலும் வீதியுலா கண்டருளினா்.

பஜனை இசைக்குழுக்கள், பஜனைகள் மற்றும் மங்களகரமான வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், நகர வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது.

பக்தா்கள் ஒவ்வொரு அடியிலும் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினா். பின்னா், ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், குருக்கள் உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனா்.

பின்னா் ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தனா். இதில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.