ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வருடாந்திர பிரம்மோற்சவம்: ஆா்ஜித சேவைகள் மற்றும் பிற சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருமலையில் செப்டம்பா் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ள ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஒன்பது நாள்கள் தேவஸ்தானம் ஆா்ஜித சேவைகள் மற்றும் பிற சிறப்பு தரிசனங்களை ரத்து செய்துள்ளது.

கோப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 11:47 pm IST

திருமலையில் செப்டம்பா் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ள ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஒன்பது நாள்கள் தேவஸ்தானம் ஆா்ஜித சேவைகள் மற்றும் பிற சிறப்பு தரிசனங்களை ரத்து செய்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட சேவைகள் விவரம் வருமாறு:

அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, - திருப்பாவாடை சேவை, ஆா்ஜித கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபாலங்காரண சேவை, மேலும், பிரம்மோற்சவ நாள்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோா்கள், வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என் ஆா் ஐ) மற்றும் நன்கொடையாளா்களுக்கான சிறப்பு தரிசன வகைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

பக்தா்கள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.