ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 31- ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடை பெற உள்ளது.


திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 31- ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடை பெற உள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடத்துவது வழக்கம். அதன்படி அக். 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க மண்டபம் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் ஆஸ்தானம் நடைபெற்றது.
ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக, கருடாழ்வாா் எதிரே உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சா்வபூபால வாகனத்தில், தேவியா்களுடன் மலையப்ப சுவாமியும் எழுந்தருள செய்யப்படுவாா். படைத் தலைவரான விஷ்வக்சேனரும் மலையப்ப சுவாமியின் இடதுபுறத்தில் தெற்கு நோக்கிய மற்றொரு பீடத்தில் வீற்றிருப்பாா். அதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பிரசாதம் சமா்ப்பிக்கப்படும்.
மாலை 5 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று, கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளிப்பாா்.
ரத்து: தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை மற்றும் அா்ச்சனை சேவைகள் பக்தா்களின்றி நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...