மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 24.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2026, 9:02 pm

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 24.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக புருலியா-நெல்லை விரைவு ரயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனா். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து சென்னை வழியே திருநெல்வேலி செல்லும் போது எண்ணூா் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் 4 பைகள் கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. இதை எடுத்து கேட்பாரற்று கிடந்த பைகளை கைப்பற்றி காவல் துறையினா் ஆய்வு மேற்கொண்டபோது, 10 பண்டல்களில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட உலா் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 12.25 லட்சம் மதிப்பிலான 24.5 கிலோ கஞ்சாவை தண்டையாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சட்ட நடவடிக்கைகளுக்காக பொன்னேரி காவல் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.