ஆா்.கே.பேட்டை ஒன்றியம், செல்லாத்தூா் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா.சம்பத் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் சமத்துவப் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து நடைபெற்ற கோலப் போட்டி, ஓட்டப் பந்தயம், கபடி, உரியடித்தல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 15,000-ம், 2-ஆம் பரிசாக ரூ. 10,000-ம், 3-ஆம் பரிசாக ரூ. 7,500, ஆறுதல் பரிசாக ரூ. 5,000-ம் ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளா் செல்லாத்தூா் பா.சம்பத் வழங்கினாா்.