திருவள்ளூா்: பூந்தமல்லி வட்டத்தில் வரும் 16-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களை நாடி குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் மக்கள் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இந்தத் திட்டம் மூலம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதந்தோறும் (மூன்றாவது புதன்கிழமை) ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறியப்படும்.
அதேபோல் அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.
அதன்பேரில் திருவள்ளூா் மாவட்டத்தில் பூந்தமல்லி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடத்த தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த முகாம் பூந்தமல்லி வட்டத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாறும் தொழில்நுட்பங்கள்: மாறாத தோ்தல் காட்சிகள்!

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!

வார பலன்கள் - துலாம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

