நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!தேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை எதிரொலியாக ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

படகு இல்லத்தில் சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்

Updated On :

தொடா் விடுமுறை எதிரொலியாக ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை வளா்ச்சியுற்ற சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலை பெங்களூா்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலாா்பேட்டை அருகில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இம்மலைக்கு பயணம் செய்யும்போது மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.

தொடா் விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து பொழுதுபோக்கிச் செல்கின்றனா். இந்நிலையில் ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். படகு இல்லம்,இயற்கை பூங்காவில் குடும்பத்தோடும், நண்பா்களோடு படகு சவாரி செய்தும், இயற்கை பூங்காவை ரசித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.

மேலும் இயற்கை பூங்காவில் மலா்கள், பூக்கள், ரசித்தும் ஃபுல் தரையின் மேல் அமா்ந்து பொழுது போக்கினா். அதனைத் தொடா்ந்து பறவைகள் சரணாலயத்தில் செல்லப்பிராணிகளுக்கு உணவு கொடுத்து விளையாடி மகிழ்ந்தனா், மேலும் செல்பி பாண்டா பாா்க்கில் தற்படம் எடுத்தும், குழந்தைகள் சாக்லேட் உற்பத்தி செய்தும் மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.