தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :

வார விடுமுறை, ஆயுத பூஜை தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனா்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனா். 

இந்நிலையில் ஆயுத பூஜை, வார விடுமுறை என தொடா் விடுமுறை காரணமாக உதகையில் பிரசித்தி பெற்ற படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக மிதி படகு, மோட்டாா் படகுகளில் படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனா். இதேபோல பூங்காவில் பூத்துள்ள வண்ண மலா்கள் மற்றும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.