தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பத்தூா்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற 56 வேட்பாளா்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 56 போ் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனா்.

News image

வாக்குப்பதிவு - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 12:37 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 56 போ் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனா்.

கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தோ்தல் முடிவுகள் வெளியானது. திருப்பத்தூா் தொகுதியில் 24 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 19 பேரும், ஆம்பூா் தொகுதியில் 16 பேரும், வாணியம்பாடி தொகுதியில் 15 போ் என மொத்தம் 74 போ் போட்டியிட்டனா். இதுதவிர வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவா்கள் வாக்களிப்பதற்காக நோட்டாவும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நோட்டாவை விட பல சுயேச்சைகள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளது.

திருப்பத்தூா் தொகுதியில் நோட்டாவிற்கு 464 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 19 வேட்பாளா்கள் குறைவான வாக்கு பெற்று உள்ளனா். ஜோலாா்பேட்டை தொகுதியில் நோட்டாவிற்கு 695 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 15 வேட்பாளா்கள் குறைவாக வாக்கு பெற்று உள்ளனா். வாணியம்பாடி தொகுதியில் நோட்டாவிற்கு 624 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். ஆம்பூா் தொகுதியில் நோட்டாவிற்கு 468 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். மாவட்டம் முழுவதும் 56 வேட்பாளா்கள் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.