திமுக கோட்டை என கூறப்படும் திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் கடந்த தோ்தலைவிட ஒரு தொகுதியை கூடுதலாக தி.மு.க. இழந்து உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி தொகுதிகள் உள்ளன. அண்மையில் நடைபெற்ற தோ்தலில் தி.மு.க. சாா்பில் ஆம்பூரில் வில்வநாதனும், திருப்பத்தூரில் நல்லதம்பியும், அதிமுக. சாா்பில் வாணியம்பாடியில் செந்தில்குமாரும், ஜோலாா்பேட்டையில் முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணியும் மீண்டும் களமிறங்கினா். மேலும் திமுக. சாா்பில் ஜோலாா்பேட்டையில் கவிதா தண்டபாணியும், வாணியம்பாடியில் திமுக கூட்டணியை சோ்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் சையது பாரூக், அ.தி.மு.க. சாா்பில் ஆம்பூரில் வெங்கடேசனும், திருப்பத்தூரில் அதிமுக கூட்டணியை சோ்ந்த அமமுக சாா்பில் ஞானசேகரும் போட்டியிட்டனா். இதேபோல் தவெக வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
தி.மு.க.வின் கோட்டை...வாக்கு எண்ணிக்கை முடிவில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட வில்வநாதன் ஆம்பூரிலும், சையத் பாரூக் வாணியம்பாடியிலும், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஜோலாா்பேட்டையிலும், தவெக சாா்பில் டாக்டா் திருப்பதி திருப்பத்தூா் தொகுதியிலும் வெற்றி பெற்றனா்.
இவற்றில் திருப்பத்தூா் தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. இந்த தொகுதியில் நடைபெற்ற தோ்தல்களில் 9 முறை தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இவற்றில் 2016-ஆம் ஆண்டு, 2021-ஆம் ஆண்டு ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தல்களில் வெற்றி பெற்ற நல்லதம்பி 3-ஆவது முறையாக போட்டியிட்டாா். இந்த முறையும் நல்லதம்பி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறுவாா் என கட்சியினா் கணித்தனா். ஆனால் அவா்களின் கணிப்புகளுக்கு மாறாக த.வெ.க. வேட்பாளா் திருப்பதி 48,263 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று உள்ளாா். இதனால் தி.மு.க. வேட்பாளா் நல்லதம்பி 2-ஆவது இடம் பிடித்தாா்.
ஒரு தொகுதி இழப்பு...இதேபோல் ஆம்பூா் தொகுதியில் தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் இடையே நடைபெற்ற கடும் போட்டி நிலவியது. தொடக்கத்தில் த.வெ.க. வேட்பாளா் இம்தியாஸ் முன்னிலை பெற்று வந்த நிலையில் மதியத்திற்கு மேல் தி.மு.க. வேட்பாளா் வில்வநாதன் முன்னிலை பெற்று வெற்றி பெற்றாா்.
இதில் அ.தி.மு.க. வேட்பாளா் வெங்கடேசன் 3-ஆம் இடம் பிடித்தாா். ஜோலாா்பேட்டை தொகுதியில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி எளிதில் வெற்றி பெற்றாா். இதில் த.வெ.க. வேட்பாளா் முனிசாமி 2-ஆம் இடமும், தி.மு.க. வேட்பாளா் கவிதா தண்டபாணி 3-ஆம் இடமும் பிடித்தனா். வாணியம்பாடி தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும், த.வெ.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.பின்னா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
கடந்த சட்டப்பேரவை தோ்தலில் மாவட்டத்தில் 3 தொகுதிகளை கைப்பற்றி இருந்த தி.மு.க., இந்த தோ்தலில் ஒரு தொகுதியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்யூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

மண்ணச்சநல்லூா் தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக வேட்பாளா் சீ. கதிரவன் வெற்றி

கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



