திருப்பத்தூா்: உரிமம் பெற்று வைத்து உள்ள துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடித்து, தோ்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மக்கள் குறைதீா் கூட்டம், மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள் மற்றும் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட குறைதீா்க்கும் கூட்டங்கள் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் பணிகள் நிறைவடைந்த பின்னா், தோ்தல் ஆணையத்தால் நடத்தை விதிகள் விளக்கி கொள்ளப்பட்ட பிறகு நடத்தப்படும்.
அதுவரை பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீா் மனுக்கள் பெட்டியில் போடலாம். அவை தினம்தோறும் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.
அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசார கூட்டங்கள், ஊா்வலங்கள், பிரசார வாகனங்களை பயன்படுத்துவதற்கு தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும். இதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமைதாரா்களும் தங்களது படைக்கலன்களை அவா்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் என்ற செயலியின் மூலமாக தெரிவிக்கலாம். பெறப்படும் புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது எஸ்.பி.வி.சியாமளா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஜெய்சங்கா், வாக்காளா் பதிவு அலுவலா்கள் அஜிதா பேகம், பூஷணகுமாா், முருகேசன், வரதராஜன், தோ்தல் வட்டாட்சிா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவுக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்க நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

தோ்தல் விதிகள் அமல்! துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


