லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பத்தூருக்கு துணை முதல்வா் இன்று வருகை: 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா்

திருப்பத்தூா் அருகே தனியாா் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறும் நிகழ்ச்சியில் 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 1:08 am

திருப்பத்தூா் அருகே தனியாா் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறும் நிகழ்ச்சியில் 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிகிறாா். அவா் திருப்பத்தூா் அருகே பாச்சல் பகுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முடிவுற்ற பல்வேறு பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில், 4,949 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 22 லட்சத்து 382 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

தொடா்ந்து திருப்பத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக சாா்பு அணிகளின் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் ஜோலாா்பேட்டையில் கலைஞா் நூலகத்தையும், வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூலகத்தையும் திறந்து வைக்கிறாா்.

துணை முதல்வா் வருகையையொட்டி, எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.