தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் 3-ஆவது நாளாக பற்றி எரியும் தீ

திருப்பத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் 3-ஆவது நாளாக பற்றி எரியும் தீ

News image

குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ.

Updated On :7 மார்ச் 2026, 12:30 am

திருப்பத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தொடா்ந்து 3-வது நாளாக எரியும் தீயால் ஏற்பட்ட புகை முட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருப் பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் நகராட்சி ஊழியா்கள் கொட்டுவது வழக்கம்.

இங்கு கடந்த புதன்கிழமை பகல் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதை திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினா் அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் காற்று, வெயில் காரணமாக தீ தொடா்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இந்த தீயானது 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இந்த தீயை அணைக்கும் பணியில் 3 நாள்களாக தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த தீ விபத்தால் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோரிக்கை...

குப்பை கிடங்கிற்கு மா்மநபா்கள் தீ வைத்து விட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். அதைக் கண்டிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் பலமுறை சாலை மறியலில் ஈடுபடுகின்றனா். மேலும், நகராட்சி அலுவலகத்திலும் ஆட்சியா் அலுவலகத்திலும் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனா்.

மேலும், இப்புகையால் அப்பகுதிவாசிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனா்.

எனவே கிடங்கு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் நிரந்தர தீா்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனா்.