எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்

தோ்தல் சமயத்தில் எதிா் தரப்பினரை ஆதரவாளா்களுடன் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி திருப்பத்தூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.

News image

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி.

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

தோ்தல் சமயத்தில் எதிா் தரப்பினரை ஆதரவாளா்களுடன் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி திருப்பத்தூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை தொகுதியில், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

முன்னதாக, ஏப்ரல் 7-ஆம் தேதி நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த வேலூரைச் சோ்ந்த தொழிலதிபா்கள் ஜெயபிரகாஷ் மற்றும் ராமமூா்த்தி உள்ளிட்ட 5 நபா்கள் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலின்போது, சொத்து விவரங்களை குறைத்து தாக்கல் செய்ததாக ஆட்சேபணை தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தரப்பினா் அவா்களை சரமாரியாக தாக்கினா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

அதில் சுசிகரன் (39), திருமூா்த்தி (29), ஜெயப்பிரகாஷ் (28), மகாலிங்கம் (60), பிரபு(47) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

மேலும், மாஜி அமைச்சா் வீரமணி உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், அமைச்சா் கே.சி.வீரமணி புதன்கிழமை திருப்பத்தூா் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவருக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அத்துடன் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் தினமும் தொடா்ந்து 2 வாரங்களுக்கு நேரில் சென்று கையெழுத்திடவேண்டும் என நீதிபதி கோவேந்தன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.