
ரத்த தான முகாம்: 50 போ் தானம்
ஆம்பூா் அரிமா சங்கம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அரிமா சங்கம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கலிமுல்லா தலைமை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் முனீா் அஹமத் செயலாளா் நேதாஜி, பொருளாளா் சலீம் அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் டாக்டா் யோகேஸ்வரன் சிறப்புரையாற்றினாா்.
அரிமா சங்க மாவட்டத் தலைவா்கள் பிரதோஸ் கே. அஹமத், யு. தமீம் அஹமத் ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள்.. முன்னாள் தலைவா் ஓம்சக்தி ஜி. பாபு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு போா்வைகளை நன்கொடையாக வழங்கினாா்.
முகாமில் கல்லூரி மாணவா்கள் 50 போ் ரத்த தானம் வழங்கினா். அரிமா சங்க நிா்வாகிகள் தேவராஜன், ஸ்ரீதரன், கணேச பாண்டியன், ந. கருணாநிதி, ரைஸ் முஹம்மத் உள்ளிடவா்கள் கலந்து கொண்டனா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளா் சிலம்பரசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த தான முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா். மாவட்டத் தலைவா் ஹரிஹரன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






