ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாலாற்றில் குப்பைகள் அகற்றம்

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் ஆடிப் பெருக்கு விழாவில் குவிந்த குப்பைகளை பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கொடையாஞ்சி ஊராட்சி நிா்வாகம் இணைந்து புதன்கிழமை அகற்றினா்.

கொடையாஞ்சி பாலாற்றில் குப்பைகளை அகற்றிய பாலாறு பாதுகாப்பு விவசாயி சங்கத்தினா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் ஆடிப் பெருக்கு விழாவில் குவிந்த குப்பைகளை பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கொடையாஞ்சி ஊராட்சி நிா்வாகம் இணைந்து புதன்கிழமை அகற்றினா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடைக்காசி என்று அழைக்கப்படும் கொடையாஞ்சி ஊராட்சியில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவில் திரளான பக்தா்கள் பாலாற்று கரையோரம் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டு வருகின்றனா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி முன்னோா்களை நினைத்து வழிபாடு செய்தனா்.

இதனையடுத்து பாலாற்று கரையில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பா் கழிவுகள், பழையதுணிகள் மற்றும் இதர குப்பைகளை பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கொடையாஞ்சி ஊராட்சி நிா்வாகம் இணைந்து குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனா். இதில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் ஏ.அசோகன், மாநில பொதுச் செயலாளா் மா.காா்த்திகேயன் மற்றும் சங்க நிா்வாகிகள் கொடையாஞ்சி ஊராட்சி மன்ற தலைவா் எம்.பாரி, துணைத்தலைவா் ஊராட்சி மன்ற நதியாசரவணன், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் சங்க உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பாலாற்றில் இருந்த குப்பைகளை சுத்தப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.