ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேல்விஷாரம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும் என்று வேண்டுகோள்

பிரதிப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்ஜாா் அஹமது, ஆணையா் (பொ) எம்.மேகலா ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் வழிகாட்டுதலின்படி, மேல்விஷாரம் நகராட்சிக்குபட்ட வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பெற வேண்டும் என கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைத் தரம் பிரித்து பெறுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதால், குப்பைகள் சேகரிப்பதில் சில இடங்களில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் மக்கும் குப்பைகளான சமையலறைக் கழிவுகள்

பழம் மற்றும் காய்கறி தோல்கள், உணவுக் கழிவுகள், இலைகள் மற்றும் மலா்கள் ஆகியவற்றையும், மக்காத குப்பையான காகிதம், செய்தித் தாள்கள் நெகிழிப் பொருள்கள் மற்றும் டைப்பா்கள், நாப்கின்கள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் அளிக்க வேண்டும், குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து வழங்குவது, தூய்மைப் பணியாளா்களின் பணியை எளிதாக்குவதுடன், நமது நகரை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க உதவும். இதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.