தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், பணி நிறைவு பெற்ற மூன்று ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நகராட்சி காந்திநகா் இந்து தொடக்கப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் கே.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மகளிரணி செயலாளா் ஜைய்புன்னிஷா, பொருளாளா் ஷாகின் சுல்தானா முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவரும் நகரச் செயலாளருமான பூ.முருகேசன் வரவேற்றாா்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களான எஸ்.ஷகிலா பேகம், எம்.முசாத் ஆரா, எம்.முனீரா பானு ஆகிய மூவருக்கும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் அப்துல் மஜீத் நினைவு விருது மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளா்களாக நாட்டறம்பள்ளி வட்டாரக் கல்வி அலுவலா்கள் எம். உதயசங்கா், ஏ.சரவணன், சையத் முஜிபூா் ரகுமான் ஆகியோா் கலந்துகொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களின் கல்விச் சேவையைப் பாராட்டிப் பேசினா்.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியா்கள் ரோஸ் லிடியா தனராணி, வேல்விழி, ஷாஜிதா பேகம், யுவராணி, ஞானசேகா், ரமேஷ் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் வெற்றிவேல், ரமேஷ், அஜ்மல், நபில் அகமத் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், குடும்பத்தினரும் கலந்துகொண்டனா். நிறைவாக, கிளைத் துணைச் செயலாளா் லி. அரவிந்தன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பணிநிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


