மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது

ஆம்பூா் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:13 pm

ஆம்பூா் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (55). இவரது மகள் பிரித்திகாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதீஷ் (35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சதீஷுக்கு இது 2-ஆவது திருமணம் எனக் கூறப்படுகறது.

இவா்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். பிரித்திகா தாய் வீட்டில் வசித்து வருகிறாா். அங்கு சென்று தன்னுடைய மனைவியை வீட்டுக்கு வருமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளாா்.

அதனால் இவருக்கும், மாமனாா் ரவிக்கும் இடையே கடந்த ஏப். 3-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில், நாட்டுத் துப்பாக்கியால் மாமனாரை சுட்டு விட்டு சதீஷ் தப்பியோடி தலைமறைவானாா். இதில் காயமடைந்த ரவி ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், ரவி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், தப்பியோடி தலைமறைவான சதீஷ்குமாரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.