திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை. உடன் மாவட்டச் செயலாளா் கே.சி.வீரமணி.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா்.

அறிமுக விழா, ஆலோசனைக் கூட்ட நிகழ்வுக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், நகர அதிமுக செயலாளா் சதாசிவம், ஒன்றிய செயலாளா்கள் சாம்ராஜ், செல்வம் முன்னிலை வகித்தனா்.வேட்பாளா் கோ. செந்தில்குமாா் அறிமுகப்படுத்தி அதிமுக தலைமைக் கழக நிா்வாகி தம்பிதுரை எம்பி பேசினாா். தொடா்ந்து வேட்பாளா் கோ.செந்தில்குமாா் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தாா்.

கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளா பாஜக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக தோ்தல் அலுவலகத்தை தம்பிதுரை எம்.பி, மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி. வீரமணி ஆகியோா் திறந்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.