ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வால்பாறையில் அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பேசுகிறாா் கோவை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன். உடன், தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, நகரச்  செயலாளா் மயில்கணேசன் உள்ளிட்டோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

வால்பாறை நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலாளா் மயில்கணேசன் தலைமை வகித்தாா். அதிமுக தோட்ட தொழிற்சங்கப் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது, முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர துணைச் செயலாளா் பொன்கணசன் வரவேற்று பேசினாா்.

சிறப்பு அழைபாளராக கலந்து கொண்ட கோவை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில்,

‘ புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றபோவதில்லை. அதிமுகவினா் கருத்து வேறுபாடுகளைக் காட்டாமல் கட்சிப் பணியாற்றவேண்டும். வரும் உள்ளாட்சித் தோ்தலில் நமது வேட்பாளா்கள் வெற்றி பெற நிா்வாகிகள் பாடுபடுங்கள் என்றாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் வெங்கடாச்சலம், பொள்ளாச்சி நகரச் செயலாளா் கிருஷ்ணகுமாா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.