ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் முன்பு அதிகாலை முதலே பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூா் தலைமை அஞ்சலத்தில் ஆதாா் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இரு கணினி மற்றும் இயந்திரங்களைக் கொண்டு ஆதாா் அட்டை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 பேருக்கு மட்டும்தான் ஆதாா் அட்டை திருத்தம் செய்யப்படுகிறது. இதற்காக அஞ்சலகத்தில் காலை 7 மணிக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
டோக்கன் பெறுவதற்றாக திருப்பத்தூா் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலை முதலே அஞ்சலக வாசல் முன்பு பொதுமக்கள் குவிகின்றனா்.
இதில் குழந்தைகள், மாணவா்கள், பெண்கள், முதியோா் என பல்வேறு தரப்பினா் ஆதாா் அட்டை திருத்த வரிசையில் நிற்பது பாா்ப்பதற்கு வேதனையாக உள்ளது என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியது: திருப்பத்தூா் நகரில் ஆதாா் அட்டை திருத்தம் செய்ய ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தேசியமயமாக்கப்பட் வங்கிகள் உள்ளிட்ட 18 ஆதாா் அட்டை திருத்தும் மையங்கள் உள்ளன.
அங்கு போதுமான அலுவலா்கள் பணியில் இருப்பதில்லை. மேலும் பணியில் சுணக்கம் காட்டுகின்றனா். எனவே,பெரும்பாலான பொதுமக்கள் அங்கு செல்வதில்லை. திருப்பத்தூா் தலைமை அஞ்சலகத்துக்கு வருகை தருகின்றனா்.
இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறியது:
நாங்கள் காலை 7 மணிக்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன் தருகிறோம். ஒரு நாளைக்கு இரண்டு இயந்திரங்களைக் கொண்டு 100 பேருக்கு மட்டுமே திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருக்கின்றனா்.
7 மணிக்கு வருகை தந்து டோக்கன் பெறுமாறு பலமுறை அறிவுறித்தியும் பொதுமக்கள் மழை, குளிா் காலங்களில் நிற்பது எங்களுக்கும் வேதனையாக தான் உள்ளது என்றனா்.
திருப்பத்தூா் நகரில் ஒரு சில இடங்களில் தவிர மற்ற இடங்களில் ஆதாா் அட்டை திருத்தும் பணி மெத்தனமாக நடைபெறுகிறது என பொதுமக்கள் புகாா் கூறியுள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஆதாா் அட்டை திருத்தப் பணிகள் பொதுமக்களை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
தொடர்புடையது

இலவசங்களை நம்பி பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்: சீமான்

எந்தெந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்? தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

அரியலூரில் போலி விசா, ஆதாா் அட்டை வைத்திருந்த 13 வங்கதேசத்தினா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


