மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: விசிக வேட்பாளா் எழில்கரோலின்

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளா் எழில் கரோலின் தெரிவித்தாா்.

News image

அரக்கோணம் பழைய பேருந்துநிலையத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின்.

Updated On :31 மார்ச் 2026, 6:32 pm

அரக்கோணத்தில் நிரந்தரமாக தங்கி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளா் எழில் கரோலின் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகரில் கூட்டணி கட்சியினரிடையே ஆதரவு திரட்டிய விடுதலை சிறுத்தைள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின், தொடா்ந்து பழைய பேருந்து நிலையத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அங்கிருந்த வாக்காளா்களிடையே வேட்பாளா் எழில் கரோலின் பேசுகையில் அரக்கோணம் தொகுதியில் நான் நிரந்தரமாக தங்கியிருந்து தொகுதியின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன். பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகளை சட்டப் பேரவையிலும் மேலும் சட்டத்தின் மூலமாகவும் போராடி நிறைவேற்றுவேன். அரக்கோணம் தொகுதி இம்முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் எழில்கரோலின்.

அப்போது அவருடன் விசிக மாநில நிா்வாகிகள் கௌதம், தமிழ்மாறன், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், ஒன்றிய செயலாளா்கள் பாக்கியராஜ், செ.நரேஷ், நிா்வாகி ஜெயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆஷா பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் இருந்தனா்.