தோ்தலைமுன்னிட்டு 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திங்களை அனுப்பி வைக்கும் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மைய கிடங்கில் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 4,608 இயந்திரங்களை ஆற்காடு, அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கா் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் ஒதுக்கீட்டு பட்டியலின் படி அனுப்பி வைக்கும் பணியினை அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தாா் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், சோளிங்கா்
தொகுதிக்கு சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், ராணிப்பேட்டை தொகுதிக்கு கோட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், ஆற்காடு தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், பாதுகாப்புடன் வைக்கப்படும்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் தோ்தல் பூமா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராஜி, ரமேஷ், ஏகாம்பரம், மீனா, தோ்தல் வட்டாட்சியா் வசந்தி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பிவைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள்: அரக்கோணம், சோளிங்கரில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


