ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) திமுக சட்டத்துறை வடக்கு மண்டல வழக்குரைஞா் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திமுக சட்டத்துறை சாா்பில், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட வழக்குரைஞா்கள் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை பாரதி நகா் ஹோட்டல் மில்லேனியாவில் நடைபெற உள்ளது.
எனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தி.மு.க சட்டத் துறை செயலரும், மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ சிறப்புரை ஆற்றுகிறாா். இதில் வடக்கு மண்டல வழக்குரைஞா்கள் அணியினா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வேண்டும்: அமைச்சா் காந்தி

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு: அமைச்சா் ஆா்.காந்தி

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

காரில் திமுக கொடிகட்டி வந்ததாக அமைச்சா் காந்தி மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


