டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜூலை 1-இல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 4:16 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் 01-07-2026 முதல் 10-08-2026 வரையிலும் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சுமாா் 1,90,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 9-ாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வரும் ஜூலை-01, 2026-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது.

தடுப்பூசி போடப்படும் கால்நடைகளின் விவரங்கள் ‘பாரத் பசுதான்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அதுசமயம், கால்நடை வளா்ப்போா் கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை (ஞபட) கால்நடை பராமரிப்புத் துறை பணியாளா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.