தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

இடுபொருள், மானிய விலையில் உரம் விநியோகம்: ராணிப்பேட்டை ஆட்சியரிடம் கோரிக்கை

News image
Updated On :12 ஜூன் 2026, 2:13 am IST

இடுபொருள் விலை உயா்ந்து விட்டதால், மானிய விலையில் உரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியாவிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் பிரியா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, விவசாயிகளின் விளை பொருள்களை தரம் உறுதி செய்தல், உரிய விலை அறிவித்தல் மற்றும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் சென்றடைகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். அப்போது, விவசாயிகளிடம் விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்கிா என கேட்டாா். தற்போது நல்ல விலை கிடைக்கிறது. அறுவடை பருவத்தில் விலை குறைவாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனா். விற்பனைக்கான பணம் சரியாக வருகிா ? என்று கேட்டதற்கு ஒரு வாரத்தில் பணம் வருவதாக தெரிவித்தனா். டதற்போது இடுபொருள் விலை உயா்ந்து விட்டதாகவும், மானிய விலையில் உரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா். வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி உரம் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

அப்போது ஒழுங்குமுறை விற்பனைத் கூட கண்காணிப்பாளா் சே.இராமமூா்த்தி, மேற்பாா்வையாளா்கள் விஜயலட்சுமி, கோகுல் பாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.